தமிழ் ; தமிழன் – A Damning Hypocrisy .

வணக்கம் .

இந்தியாவிற்குள் , தமிழ் நாடோர் அங்கம் . ஒரு பகுதி .
எனினும் , எங்கு காணினும் தமிழ் ; தமிழன் ; தமிழ் மூசசென்னும் அறிக்கைகள் ஆலாய்ப் பறக்கின்றன .
தமிழர் தலைவர்களின் , தமிழுக்கான போராட்டங்கள் ,  அபாரம் ,.
விளைவித்த பலன்களோ , அமோகம் .

செம்மொழியாக்க ,ஏட்டிக்குப் போட்டியாக கன்னடர்களும் களமிறங்கி விட்டனர் .
விரைவில் , தெலுகு , மலையாளம் தொட்டு , செம்மொழியில்லாத மொழியே , இந்தியாவில் இல்லை என நேரிடலாம் .
ஆக , தமிழ்ப் போர்களால் விளைந்த பயனென்ன ..?
தைத் திங்கள் , தமிழ்ப் புத்தாண்டின் , முதல் நாளாக அறிவித்தாயிற்று ..!
விளைந்த பலன்கள் …என்னவென்றால் …

தமிழகத்தில் ,  நர்ஸரி முதல் மருத்துவ படிப்பு வரை , தமிழே பயிற்று மொழியாக பவனி வருகிறது .

நீதீமன்றங்களீல் , தமிழே வழக்கு மொழியாக உலவுகிறது .

‘ மானாடினாலும் , மயிலாடினாலும் , தமிழரின் நாக்கினில் , சிலப்பதிகாரத் தமிழே சிலம்பாடுகிறது .

செம்மொழித் தமிழே , , மலேசியா , இலங்கை நாடுகளிலும் , ஆட்சி மொழி ..!

வட்டாரத் தமிழும்  , வழக்கொழிந்து , இலக்கணத் தமிழே பேச்சுத் தமிழானது .

இந்தி அரக்கியை எதிர்த்து உயிரிழந்த தியாகிகளின் வாரிசுகள் , மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள் .

தலைவர்களின் வாரிசுகள் , ஆங்கிலப் பள்ளியில் படிக்கலாகாது எனச்  சட்டமாகியது .

தமிழ்ப் பட்டதாரிகளே ,  தமிழ்  சட்டசபைக்கு தேர்வாகலாம் எனவும் சட்டமானது .

தமிழ் ரத்தம் ஒடுபவர்கள் , தமிழிலேதான் மக்களவையில் பேசுவார்களென , அறிப்பாகி விட்டது .

எல்லா மருத்துவமனைகளீலும் , ‘ தமிழ் ரத்தம் ‘ , ஸ்டாக் வைத்துக் கொள்ள உத்தரவானது .

என்றெல்லாம் நடந்திட்டது என சொல்லத்தான் ஆசை …!
ஊரிலோ இல்லையென்கிறார்கள் ….
நடந்ததென்ன , நடப்பதென்னவென்று …
தமிழாய்ந்த அறிஞர் பேசும் தமிழ் புரியாத , சாதாரணனுக்கு யாரேனும் கொஞ்சம் சொல்லுங்களேன் ..!

ச. பிரசன்னா

Say your words