வணக்கம் . தமிழக முதல்வரது , கொள்கைப் பிடிப்பான பேச்சு மெய்சிலிர்க்க வைக்கின்றது .
ராமரும் , ராமாயணமும் . . .புராணக் கட்டுக்கதைகள் என்ற வாதமுள்ள . . . மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றுவிட்டது .
கேவலம் , ஆட்சிக்காக . . .? கலைஞர் , அதை எப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது ..? அவரது , சுயமரியாதைக் கொள்கை என்னாவது . . ?
ஆரியரை எதிர்த்து , மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கியிருக்கலாமே . . ? அல்லது , கேவலம் , மத்திய அமைச்சர்களையாவது , பதவி விலகச் சொல்லியிருக்கலாமே . . .?
கலைஞர் , அதை ஏன் செய்யவில்லை …என்பதுதான் , நாளைய புராணமாக இருக்கக் கூடும் . .!
கட்சி நடத்த ,யாரோ ஒருவர் வந்து பேரம் பேசினார் எனறும் , பா . ஜ . க . கட்சி நடத்த …
தி . மு . க ., பா . ம . க ., எல்லாம் இளிச்சவாயர்களா . . .என்றும் கேட்கிறார் .
கலைஞருக்கு … ‘ செலக்டிவ் அம்னிஷியா ‘ ..போலும் ..!
அதே பா . ஜ . க ., வுடன் கூட்டாயிருந்துதானே , இதே கலைஞரும் , பா . ம . க . ,வும் . . ஐந்தாண்டுக்கும் மேலாக மத்தியில் பங்கு பெற்றார்கள்் . மாறனின் மரணப்படுக்கையிலும் , அவரது மந்திரி பதவியை கலைஞர் தக்க வைத்துக் கொண்டார் .
அப்போது , இந்த திராவிடச் சூரியருக்கு , அவர்கள் ஆரியர்கள் எனத் தெரியவில்லையாமா . . ?
இளிச்சவாயர்கள் ,பதவியை கோட்டை விடுவதில் மட்டும் இளிச்சவாயர்களீல்லை போலிருக்கிறது . .!
கொள்கை வேறு ; ஆதரவு வேறு . . .என்பதுதான் பகுத்தறிவு போலும் . .! போகட்டும் .,
இதே பா . ஜ . கவும் , அ .தி . மு . க .,தான் ., சேது சமுத்திரத் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள் என்கிறார் . .? சரி . அவர்கள் , இத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றார்களே தவிர , ராமர் பாலத்தை இடித்துத்தான் நிறைவேற்றுவோம் எனச் சொல்லவில்லையே . .!
இப்போதும் , ராமர் பாலத்தை இடிக்காமல் , மாற்றுப் பாதையமைத்து நிறைவேற்றுங்கள் என்றுதானே கேட்கிறார்கள் ..?
தவிரவும் ,பார்லிமெண்ட்டில் ‘45 ‘ மணி நேரத்திற்கும் மேலாய் சேதுவிற்காய் பேசினவர்களையும் காணவில்லை என ‘வை . கோ ., ‘வைச் சாடுகிறார் .
45 வருடத்திற்கும் மேலாக , சுயமரியாதைக்காக ,சுடரெனப் பணியாற்றும் கலைஞர் ,
ஆட்சிக்காக …ஆரியருக்கு அடிபணியும் காங்கிரஸுக்கு ஆதரவை விலக்காமல் இருப்பது எந்தச் சுயமரியாதையோடு என்றாவது சொல்லட்டும் . .!
அதே போல் ,
ராமர் மட்டுமன்றி , ‘ இயேசு கிறிஸ்து ‘ , ‘அல்லா ‘ .,க்களும் கூட , மூட நம்பிக்கைதான் எனச் சொல்லி சுயமரியாதைக் கொள்கையை நிலை நாட்டட்டும் ..!
ராமரை நம்பாத கலைஞர் , ‘ ராமதாஸ் ‘ …என்ற பெயருள்ளவரை நம்பி , ஆட்சி நடத்துவதுதான் ,..
திராவிட ராமாயணம் போலும் . . .!
பிரசன்னா