வணக்கம் .
சேலம் கோட்ட துவக்கம் , இனிதாக நிறைவேறும் என செய்திகளீல் கண்டேன் .இது தமிழர்க்கு வெற்றியா …? இழிவான தோல்விதான் என அமைச்சர் வேலுவின் ‘ அய்யா ‘ -விற்கு தெரியாது போலும் .?
கோட்டம் ( Division ) என்பது மண்டலம் ( Region ) என்பதற்குள் அடங்கிய ஒன்று .
அதனால் , சேலம் கோட்டம் அமைந்தாலும் , , திருவனந்தபுரத்தை தலைமையாக கொண்ட ‘ வெஸ்ட் கோஸ்ட் ‘ மண்டலத்தில்தான் அதிகாரம் இருக்கும் . வளர்ச்சித் திட்டங்கள் முதற் கொண்டு , எதுவுமே மண்டலத்தின் ஒப்புதல் இல்லாமல் நடக்க முடியாது .
பெயருக்கு , சேலம் கோட்டத்தை அமைத்து விட்டு , அதிகாரத்தை கேரளாவிற்கு தாரை வார்க்கிறார்கள் . மீண்டும் , தமிழன் பிச்சை எடுக்கப் போவதுதான் நிதர்சனம் . சேலம் மட்டுமல்ல , கோவை வரை . . . இம் மண்டலத்தில்தான் அடங்கும் என்றால் , வெற்றி அல்ல மொத்தமாகவே அதிகாரத்தில் வெளியேற்றப்பட்டோம் என்றாகி விடும் . கேரளாவிற்கு , தானாக வந்த பரிசு இது . ராமதாஸ் உபயத்தில் ,சேலத்தை கேட்டு , அதிகாரத்தை ஏலம் விட்டதால் வந்த பதவிசு இது .
ஏறத்தாழ கடந்த 8 வருடங்களாகவே , ரயில்வே துறை இணை அமைச்சகத்தை பா .ம . க கட்சிதான் வைத்திருக்கிறது .
முதலில் , பெங்களுரை தலைமையாய் கொண்டு , தென்னக ரயில்வேயின் ஒரு பாதியை இழந்தோம் . வாயே திறக்காமல் , தாரை வார்த்த பெருமையும் அடைந்தோம் .
இப்போது , ‘ வெஸ்ட் கோஸ்ட் ‘ ரயில்வே உதயமாகிறது . மீண்டும் , பா. ம . க வால் இழப்பு மட்டும்தான் மிச்சம் .
பார்லிமெண்டில் அறிவித்தபடி , அகல ரயில் பாதை திட்டங்களீல் , செங்கல்பட்டு – விழுப்புரம் திட்டம் மட்டும்தான் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது .
இதனால் , தமிழர்க்கு என்னய்யா பிரயோஜனம் . . .? செங்கல்பட்டிற்கும் , விழுப்புரத்தையும் இணைக்க , ஆயிரக்கணக்கான பஸ் போக்குவரத்து இருக்கிறது ; பெரும்பாலானவர்கள் , அதற்காக ரயில் போக்குவரத்தை நாடுவதும் இல்லை .
உண்மை என்ன . . ?
ஆயிரம் சொன்னாலும் , பா.ம.க கட்சிக்கு பரவலான பலமும் இல்லை ; வளர்ச்சியும் தேங்கி விட்டாயிற்று . எனவே , ஒரளவு பரவலாயிருக்கும் தொகுதிகளில் , இவ்வாறான திட்டங்களை ஆரம்பிக்கிறார்கள் . நாங்களூம் இருக்கிறோம் என வீண் ஜம்பம் செய்கிறார்கள் . அவ்வளவுதான் .
இழப்பு என்னவோ தமிழ் நாட்டுக்குத்தான் . . .?
தென் மாவட்டங்கள் , வருடக்கணாக்காய் தவமிருந்தும் ஒரே ஒரு அகலப் பாதை கூட கிடைக்க வில்லை ; இனி கிடைக்கப் போவதுமில்லை.
வடக்கே கேட்டால் சொல்வார்கள் . . . ?
534 பேர் கொண்ட பார்லிமெண்டில் ,ஆறே ஆறு எம்.பி பதவிகள் கொண்ட பா . ம . க – விற்கு ரயில்வே இணை அமைச்சர் பதவி விட்டுத் தந்தோமல்லவா . .?
அதனால் , வளர்ச்சித் திட்டங்களை , நீங்கள் விட்டுக் கொடுங்கள் என்று . .!
நமக்கு இதுவும் வேண்டும் ; இன்னமும் வேண்டும் . . .!
பிரசன்னா