கனிமொழியின் பதவி .
முதல்வர் கலைஞரது ,டெல்லிப் பயணத்தினாலான ‘ நதி நீர் ‘ இணைப்பு பற்றிய கருத்துக்கள் மிகவும் வரவேற்கத்தக்கவைதான் .
டெல்லி பயணம் பயனுள்ளதுதான் .ஆனாலும் , ஒரு சந்தேகம் எழுகிறது .
உணமையில் , நதி நீர் இணைப்பா ., கலைஞரது பயணத்திற்கு காரணம் ..?
மகளுக்கு , தந்தை ஆற்றும் கடனாக எம். . பி. பதவியும் தந்துவிட்டார் .
மந்திரி பதவியும் , மகளூக்கு வாங்கித் தராமல் இருப்பாரா என்ன ….? ராசாவுக்கே உண்டென்றால் கனிமொழி என்ன சும்மாவா ..?
திருச்சி சிவாவும் , தன் வாயை உளறி விட்டார் . எந்தவொரு தி,.மு.க எம் . பியின் பதவி ஏற்புக்கும் , கலைஞர் வந்ததில்லையாம் ; இவர்களுக்குத்தான் வந்திருக்கிறாராம் .
சிறப்பிக்கக் காரணமே , சிவா நீயில்லையப்பா …? கனிமொழி .கலைஞர் பெற்ற மகளப்பா . . .!
போதாததுக்கு , நதி நீர் பிரச்சனைகளை தீர்க்க , மன்மோகன் சிங் ஒரு திட்டம் வைத்திருக்கிறாரா என்றும் முதல்வர் கலைஞர் சொல்கிறார் .
எந்தவொரு பிரச்னைக்கும் , உடனே கலைஞர் கடிதம் எழுதுவார் ; அதன் நகலையும் , பத்திரிக்கைகள் வெளியிடும் . இதுதானே வழக்கம் .
நேரில் , மன்மோகன் சிங் சொன்ன ரகசிய ‘ மாஸ்டர் பிளானை ‘ வெளியிடக் கூடாதா . .?
நதி நீர் ் தகறார்களுக்கு முடிவு கட்டலாமே ..? மாட்டவே மாட்டார் .
கனிமொழிக்கான …மந்திரி பதவிக்கு அடி போட்டிருக்கிறார் . கிடைத்ததும் ,
அத் திட்டம் பற்றி , ஒரு துளி வேண்டுமானால் கிடைக்கலாம் .
நதி நீரோ ,, அந்த துளி அளவும் கிடைக்காது .
ஆக , தபால் , தகவல் தொழில்நுடப்த் துறை , தி .மு .க ‘விற்கே குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது .
மந்திரிகளை மாற்றும் உரிமை , பிரதம்ருக்கில்லை ..? கலைஞருக்குத்தான் ..!
இது தி . மு. விற்கு கவுரவ்மான மாற்றம்தான் .
ஆனால் , காங்கிரஸுக்கோ , அவமானகரமான மாற்றம் .
ஐ . டி. துறை என்பது ,வளர்ச்சியின் உச்சத்திலிருக்கும் துறை . நவீன உலகில் , ஒரு ஐ . டி. துறை அமைச்சரின் அதிகாரமும் , விளம்பர ஆதாயங்களூம் கணக்கில்லாதவை .
சோனியாவை மிஞ்சும் அளவு அதிகாரம் , வேறு காங்கிரஸ்காரர்க்கு கிடைக்கக் கூடாது என்பதே சோனியாவின் குறிக்கோள் . விளைவு ..?
ஆளும் கட்சியான காங்கிரஸ் , ஐ .டி . துறையை , தானே வைத்துக் கொண்டு , ஆதாயமடையாமல் , வெறும் 15 எம். .பி. க்களை கொண்ட் தி . மு. க விற்கு தந்திருக்கிறது .
36 எம். . எல். ஏக்களிருந்தும் , தமிழகத்திலோ , ஆட்சியில் பங்கு கேட்டு திருவோடு ஏந்திக் கொண்டிருக்கிறது .
கர்ம வீரரின் காங்கிரஸுக்கு ….
என்னே பெருந்தன்மை . . .!
ச. பிரசன்னா