மருத்துவப் படிப்பை ஆறரை ஆண்டாக நீட்டித்திருக்க உத்தேசித்திருப்பது , சரியான கேலிக் கூத்து .
எந்தத் துறையாயினும் , அது சார்ந்தவரே அத்துறைக்கு அமைச்சாரயிருப்பது நியாயாமாய் இருக்காது . ஏனெனில் , எடுக்கபடும் முடிவுகள் …ஏதோ ஒருவிதத்தில் , சம்பந்தப்பட்டவ்ருக்கு சாதகமாகும் அபாயம் இருக்கின்றது .
நம் கூட்டணி அரசியலால் ஏற்பட்ட விபத்தில் ஒன்றுதான் , எத்தனையோ அனுபவமிக்க , திறமைமிக்க மருத்துவர்களிருந்தும் , அன்புமணி என்ற மருத்துவருக்கு மட்டும் அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது .
அதனால் ஏற்பட்ட விபத்துகள்தான் ‘ஜிப்மர் ‘ , டில்லி ‘ எய்ம்ஸ் ‘ , மருத்துவருக்கு கிராமப்புறச் சேவை என்பவை ..! . உயிர் காக்க வேண்டிய மருத்துவர்கள் , தெருவில் இறங்கி போராடும் நிலைகள் தேவைதானா …?
பேச்சு வார்த்தையில் , ஒருமித்த முடிவு எடுக்கப்படும் என்றிருக்கிறார் அன்புமணீ ராமதாஸ் ; மறு நாளோ , எந்த முடிவிலும் மாற்றமில்லை என்கிறார் .
ஏன் ..? மருத்துவம் வியாபாரமாகி விட்டதோடு அரசியலும் கலந்ததாய் போனதால்தான் .!
மருத்துவத்தை முழுதுமாய் கற்பதர்காய் , நீட்டிப்பு என்றால் எவருமே இரு கை தட்டி வரவேற்கலாம் .
இவரோ ..,
மருத்துவம் என்னும் மாக்கடலில் , தனித்து , முதன்முறையாய் காலை நனைக்கப் போகும் புது மருத்துவரை , கிராமச் சேவை செய்யுங்கள் என்கிறார் .
ஏனய்யா ..? கிராமப் புற மக்கள் உயிரும் ,ஆரோக்கியமும் , அத்தனை இளப்பமாகி விட்டதா ..?
அனுபவமுள்ள , ஆற்றலுள்ள , ஏற்கனவே லட்சாதிலட்சமாய் சம்பாதித்த ..மருத்துவர்களூக்கு , கிராமப்புறச் சேவையை கட்டாயமாக்குவதுதானே ..?
எந்த ஒரு நோயாளீயும் , டாக்டரின் கைராசியை பார்ப்பான் ; அவரது , வயதை வைத்து , அவ்ரது அனுபவ ஞானத்தை வைத்துத்தான் , மருத்துவம் பார்க்கவே சம்மதிப்பான் .
படிப்பையே முடிக்காத இளைஞர்கள்தான் மருத்துவரென்றால் , மருண்டு ஒடத்தான் செய்வார்கள் .
இதற்குப் பேரா சேவை ..? ஏற்கனவே இருக்கின்ற மருத்துவமனைகளீல் , இல்லாத மருத்துவர்களை நியமித்தால் , அது சாதனை . இவர் செய்வதோ , வேதனை . அரசியலால் வந்த சோதனை .
ஆகவே , அனுபவமான டாக்டர்களுக்கு கிராமப்புறச் சேவை செய்ய விதிகளை விதிப்பதே சரியானது .
செய்வாரா அன்புமணீ ..?
அதை நிருபிக்க , அனுபவமுள்ள அவரே , முதலில் கிராமத்திற்குச் சென்று சேவை செய்யத் துவங்கலாமே ..?
- ச. பிரசன்னா