பிரசன்னாவின் சமீப கவிதை

காதற்  குணங்கள் .

காதல்
தேவ ரகசியம்தான் .
காதலர்கள் ்  
தரையிலேயே                            
நடப்பதில்லையென்பதால் !           
                                                                
காதலுக்கு
மொழியேயில்லைதான் .                    
என்னப்
பேசுகிறோமென்றே               
தெரியாமல்
காதலர்கள்
பேசிக் கொண்டேயிருப்பதால் !

காதலும்
அட்சயப் பாத்திரம்தான் .
எவ்வயதிலும்
உணவாக
உணர்வாய்
மீண்டுமெழுவதால் !

காதல்            
நல்ல ரசாயனம்தான் .                                      
தரமற்றதாயினும்                                               
தடையின்றிக்                                                   
கலப்பதனால் !

காதலும்  கூட
‘ ஒலிம்பிக்ஸ் ‘ தான் .
வெல்வதைக்
காட்டிலும்
பங்கேற்பதே
பெரிதெனக்
கருத வைப்பதால் !

காதலும்
ஒர்
இண்டெர்நெட்தான் .
எவர்க்குமே
சொந்தமில்லையென்பதால் !

  ச . பிரசன்னா .

Say your words