அறிவிப்பு …!
நமக்கான பயணங்கள்
ஏற்கனவே எழுதப்பட்டிருந்தும் …
நாம்தான் எழுப்புகிறோமென …
ஏனோ இறுமாறுகிறோம் ..?
இன்னார்க்கு இன்னாரென்று …
இறைவன் இறுதி செய்தாலும் …
எல்லார்க்கும் எல்லாமுமென …
ஏனோதானோவென அலைபாய்கிறோம் …!
வாழ்வதில் இனிமையிருந்தும்
வாழ்வில் இருத்திடாதிருந்து
மனம் போன போக்கிலெல்லாம்
புண்ணாகிப் போகின்றோம் …!
இனியேனும் அறிவோம் …?
எல்லாமும் சமமென்றால் …
ஒவ்வொன்றும் சரியென்றால் …
எதற்கிந்த வாழ்வென்று …
வெறுத்திடுவோம் நாமெல்லாம் …!
என்றிறைவன் அறிந்ததனால் …
புரிந்தவனாய் படைத்ததனால் …
வாழ்கையெனும் பாதையிலே …
எப்போதும் நிறைந்திருக்கும்
மேடுகளும் , பள்ளங்களும் …!
ச. பிரசன்னா