அழகிரியின் வெற்றி
August 4, 2009
· Filed under Uncategorized · Tagged அரசியல், கருத்துக்கள், தமிழ்ப்பதிவுகள், பிரசன்னா பக்கங்கள், பொது
வீண் கெடுபிடிகள் வேண்டாம் என அறிவித்து ,
ஆட்டத்தை மு.க .அழகிரி அட்டகாசமாய் ஆரம்பித்திருக்கிறார் .
பதவிகள் கண்ணை மறைக்காது ; திறக்கும் என நிருபித்திருப்பதற்கு வாழ்த்துக்கள் .
அழகிரியின் வெற்றியில் ஆயிரம் குறை சொல்லலாம் ; ஆனால் , மக்களால் அளிக்கப்பட்ட வெற்றியென்பதை மறக்கலாகாது .
அழகிரியின் நம்பிக்கை அசாதாரணமென , நானே நேரில் கண்டேன் .
எதேச்சையாய் , வாக்கு எண்ணிக்கை துவங்கும் நாளுக்கு முன்னிரவு , மதுரையில் நானிருந்தேன் .
இரவு பன்னிரண்டு மணிக்கே, 'பாராளுமன்றத்தில் நுழையும் அண்ணனுக்கு வாழ்த்து ', நாளை முதல் , அழகிரி மாவட்டம் என அழைக்கப்படும் ' , சொல்லி அடிப்பாரடி , அடிச்சாருன்னா நெத்தி அடிதானடி ..'' என மதுரையெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை கண்ணால் கண்டேன் .
திருமங்கலமாய் வன்முறை ஆட்டமின்றி , மதுரையே அசாதரண அமையில் இருந்தது .
' ஒவர் கான்பிடண்ஸ் ' எனலாம் . ; பணம் தந்து வாங்கியதெனலாம் …? Ê ஆனாலும் , ஒட்டுப் போட்டவர்கள் மக்கள் என்பதை மறக்கலாகாது .
எம்.ஜி. ஆர் ., மறைந்தும் , அ.தி.மு.க.,வின் கோட்டையாய் திகழ்ந்த மதுரை , இன்று அழகிரியின் அசைக்க முடியாக் கோட்டை என்பதை மறுக்க முடியாது .
வாய்ப்பு தந்த மக்களுக்கும் , தந்தைக்கும் நல்லது செய்ய அழகிரி நினைப்பார் என்பதை ஆரம்பம் உணர்த்துகிறது .
விண் கெடுபிடிகளை விட , மக்களோடு நெருக்கமாயிருத்தலே அரசியலின் அ.ஆ.ஈ என அழகிரி புரிந்திருக்கிறார் . வாழ்த்துவோம் ..!
அரசியலுக்கான நெளிவுசுளிவுகள் அழகிரிக்கே அத்துபடி என்பதை ,அ.தி.மு.க.,வே மறுக்காது .
ஆனால் , நீடிப்பதற்கு அதிரடியல்ல … ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளே வேண்டும் .
அழகிரி செய்வார் என தந்தை மட்டுமல்ல , மதுரை மக்களும் எதிர்பார்க்கின்றனர் .