December 16, 2007
· Filed under கவிதை · Tagged கவிதை, தமிழ்ப் பதிவுகள், பொது
அன்பு .
முதலிருபது வருடம்
கணவனுக்காகவும் ,
பிந்தைய வருடங்கள்
பிள்ளைக்காகவும் ,
மிஞ்சிய வருடங்களை
பேரன்களுக்காகவும்
கழித்ததும்தான்
கண்ணம்மா பாட்டிக்குத்
தெரிந்தது .
அவளது
அம்மாவின் அன்பும்
‘ பேங்க் ‘ பேலன்ஸும்தான்
உலகில்
நிரந்தரமென்று !
சொந்தம் .
அம்மாவோடு
நானும்
சேர்ந்து
கொணடேன்
முதியோர் இல்லத்தில் .
நானும்
வேண்டாத
அம்மாவாய்
மாறிய பொழுது !
ச. பிரசன்னா
December 16, 2007
· Filed under கவிதை · Tagged கவிதை, தமிழ்ப் பதிவுகள்
ஏற்பு .
கணக்கில்லா கடன்களும்
கட்டுக்கடங்கா பிள்ளைகளூம்
நிரந்தரமற்ற ஊழியங்களும்
நிச்சயமற்ற வருமானங்களூம்
சொல்லத்தகா சொந்தங்்களூம்
சொல்லவேயில்லா சொத்துக்களும்
கொண்டிருந்தும் , பொறுத்திருந்து
கோடானுகோடிப் பேர்
போராடி வாழ்கையிலே
இருப்பதிலே இன்புறாமல்
இல்லாததற்காய் ஏங்கிடாமல்
போதுமென்ற மனதோடு
வாழ்ந்திடுவீர் வளமோடு !
ச . பிரசன்னா
December 16, 2007
· Filed under கவிதை · Tagged கவிதை, காதல், தமிழ்ப் பதிவுகள்
காதற் குணங்கள் .
காதல்
தேவ ரகசியம்தான் .
காதலர்கள் ்
தரையிலேயே
நடப்பதில்லையென்பதால் !
காதலுக்கு
மொழியேயில்லைதான் .
என்னப்
பேசுகிறோமென்றே
தெரியாமல்
காதலர்கள்
பேசிக் கொண்டேயிருப்பதால் !
காதலும்
அட்சயப் பாத்திரம்தான் .
எவ்வயதிலும்
உணவாக
உணர்வாய்
மீண்டுமெழுவதால் !
காதல்
நல்ல ரசாயனம்தான் .
தரமற்றதாயினும்
தடையின்றிக்
கலப்பதனால் !
காதலும் கூட
‘ ஒலிம்பிக்ஸ் ‘ தான் .
வெல்வதைக்
காட்டிலும்
பங்கேற்பதே
பெரிதெனக்
கருத வைப்பதால் !
காதலும்
ஒர்
இண்டெர்நெட்தான் .
எவர்க்குமே
சொந்தமில்லையென்பதால் !
ச . பிரசன்னா .
October 27, 2007
· Filed under அரசியல் , பொது, கவிதை · Tagged அரசியல், தமிழ்ப் பதிவுகள், பொது
குத்துப் பாட்டுக்காரன் ..
குத்து பாட்டு …
இலவசமா . . .
பாடுவேனுங்கோ !
இலவசமா இறைச்சதென்ன ?
சொல்லுறேனுங்கோ !
கேஸ் அடுப்பு இலவசமாம் …
ரேஷன் அரிசி குறைச்சலுதான் …
சிலிண்டர் வாங்க காசு இல்லையே ..?
கனெக்ஷனுக்கு வழியுமில்லையே ..?
இலவசமா முட்டையாம் ..
இஸ்கூல்ல தருவாங்களாம் …
பாலு விலை ஏறிடுச்சியா ? – கூட
கறி விலையும் உசந்திடுச்சியா ..!
ரயிலு ரேட்ஏறலைதான் ..
ஏறி , போக ஆவலைதான் …
பஸ்ஸு ரேட்டு மாறிடுச்சியா …!
ஆட்டோ சார்ஜோ எகிறிடுச்்சியா …?
விவசாயி வாழனும்னா …
விலையை ஏத்தணும் …
எழைபாழை வாழனும்னா …
விலையைக் குறைக்கணும் ..!
ஏழை வாழத்தான் வழியுமில்ல — பண
வீக்கம்தான் குறையவில்ல …!
பட்ஜெட்லாம் போடுறாங்களாம் ..
ஏழைக்கெல்லாம் கொடுக்கறாங்களாம் …
என்னதான் கொடுத்தாங்க …?
ஏதுதான் கொடுத்தாங்க …?
தெரிஞ்சாதான் சொல்லுங்களேன் …
பணப் புழக்கமாக செய்யுங்களேன் …!
ச. பிரசன்னா