Archive for Uncategorized

அழகிரியின் வெற்றி

வீண் கெடுபிடிகள் வேண்டாம் என அறிவித்து ,
ஆட்டத்தை  மு.க .அழகிரி அட்டகாசமாய் ஆரம்பித்திருக்கிறார் .
பதவிகள் கண்ணை மறைக்காது ; திறக்கும் என நிருபித்திருப்பதற்கு வாழ்த்துக்கள் .

அழகிரியின் வெற்றியில்  ஆயிரம் குறை சொல்லலாம் ; ஆனால் , மக்களால் அளிக்கப்பட்ட வெற்றியென்பதை மறக்கலாகாது .
அழகிரியின் நம்பிக்கை  அசாதாரணமென , நானே நேரில் கண்டேன் .
எதேச்சையாய் , வாக்கு எண்ணிக்கை துவங்கும் நாளுக்கு முன்னிரவு , மதுரையில் நானிருந்தேன் .
இரவு பன்னிரண்டு மணிக்கே,    'பாராளுமன்றத்தில் நுழையும் அண்ணனுக்கு வாழ்த்து ', நாளை முதல் , அழகிரி மாவட்டம் என அழைக்கப்படும் ' , சொல்லி அடிப்பாரடி , அடிச்சாருன்னா நெத்தி அடிதானடி ..'' என மதுரையெங்கும்  போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை கண்ணால் கண்டேன் .

திருமங்கலமாய் வன்முறை ஆட்டமின்றி , மதுரையே அசாதரண அமையில் இருந்தது .
 ' ஒவர் கான்பிடண்ஸ் ' எனலாம் . ;  பணம் தந்து வாங்கியதெனலாம் …? Ê ஆனாலும் , ஒட்டுப் போட்டவர்கள் மக்கள் என்பதை மறக்கலாகாது .

எம்.ஜி. ஆர் ., மறைந்தும் , அ.தி.மு.க.,வின் கோட்டையாய் திகழ்ந்த  மதுரை , இன்று அழகிரியின் அசைக்க முடியாக் கோட்டை என்பதை  மறுக்க முடியாது .
வாய்ப்பு தந்த மக்களுக்கும் , தந்தைக்கும்  நல்லது செய்ய அழகிரி நினைப்பார் என்பதை ஆரம்பம் உணர்த்துகிறது .
விண் கெடுபிடிகளை விட , மக்களோடு நெருக்கமாயிருத்தலே அரசியலின் அ.ஆ.ஈ என அழகிரி புரிந்திருக்கிறார் . வாழ்த்துவோம் ..!
அரசியலுக்கான  நெளிவுசுளிவுகள் அழகிரிக்கே அத்துபடி என்பதை ,அ.தி.மு.க.,வே மறுக்காது .
ஆனால் , நீடிப்பதற்கு அதிரடியல்ல … ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளே வேண்டும் .
அழகிரி செய்வார்  என தந்தை மட்டுமல்ல , மதுரை மக்களும்  எதிர்பார்க்கின்றனர் .

Leave a comment »

வாரிசுகள் – from ச. பிரசன்னா

வாரிசுகள் பற்றிய விசித்திரங்கள் , நம் அரசியலுக்கே பொருந்தும் .
நேருவின் வாரிசாய் , இந்திரா காந்தி வந்தது ; ஆண்டதும் ..அனைவருமறிவார் .
இந்திராவிற்குப் பின் , ராஜிவ் காந்தி .
ராஜிவிற்குப் பின் , சோனியா காந்தி என  காங்கிரசே , வாரிசுக் கட்சியானது தெரிந்ததுதான் .
கலெக்டர் அலுவலகத்திற்குப் போனதாலேயே , ‘ இளவரசன் ;.,ஆக , ராகுல் காந்தி அரியணைக்கு தகுதியானவரும் ஆகிவிட்டார் .
ஆமாம் . தந்தையின் பேருக்கு , தனயன்கள் சொந்தம் கொண்டாடலாம் ..
‘ காந்தி ‘ என்ற பேருக்கு , இந்திரா தொட்டு ராகுல் வரை , எப்படிச் சொந்தமாவார் ..?

எம்.ஜி. ஆரின்  ., ஒட்டு வங்கி ,  ‘ ஜெ ‘ விற்குத்தான் என்பதை , ஏழு கட்சிக் கூட்டணியை எதிர்த்தும் , 61 இடங்களில் அ .தி . மு .க .,வென்றதே உணர்த்துகிறது .
நிதர்சனங்கள் சொல்வதென்ன ,….?
இந்திய அரசியலில் , வாரிசில்லா தலைவர்களுக்கே , இன்றளவும் நிரந்தரப் புகழ் நிலைக்கிறது .
வாரிசுகள் பற்றிய , ஒரு விசித்திர ஒற்றுமையையும் சற்று பாருங்களேன் …!
 தமிழக அரசியலாரின் ஆதர்ச தலைவர்கள் எவருக்குமே , நேரிடையான வாரிசுகள் இல்லையென்பதுதான் …!
காமராஜர் , பெரியார் ,  அண்ணா  , எம் . ஜி . ஆர் , ஜீவா , முத்துராமலிங்கத் தேவர் , என எவருக்குமே , நேரிடையான வாரிசுகளில்லை என்றானது , தமிழகத்தின் சாபக்கேடுதான் .
ராஜாஜிக்கோ , பெண் வாரிசுதான் உண்டு ; அவரும் , அரசியல் பக்கமே வந்ததில்லை .

போததற்கு , நினைவிற்கிருக்கும் வரை , இப் பெரும் தலைவர்கள் எவரையுமே , தங்களது வாரிசு என அறிவித்ததுமில்லை . அதுவும் , வாரிசாகப் பேசுவோர்க்கு , வசதியாகி விட்டது .
பொதுவாய் , சாதாரண பெட்டிக் கடைக்காரருக்கும் , வாரிசு வளர்க்கும் ஆசையிருக்கும் .
ஆனால் , இப்்பெரும் தலைவர்களுக்கு , எவ் வாரிசுமில்லாது போனது , வாரிசு உரிமை கொண்டாடுவோர்க்கு , கொண்டாட்டமாகிவிட்டது .
நாந்தான் வாரிசு , குருகுலக் கொழுந்தென , ஆளாளுக்கு ஆர்ப்பரிப்பதே , வழக்கமாகி விட்டது .

தி . மு . க ., வைப் பொறுத்த மட்டில் ,
அண்ணாவைச் சொல்லி , கலைஞர் வந்தார் ; ஐந்து முறை  அரசாண்டும் விட்டார் .
ஆனால் , மகனுக்கு மட்டுமன்றி , பேரன் வரை பதவி பெற வழி வகுத்தவர் , கலைஞரேதான் .
பதவிக்கு வர தயா நிதி  மாறன் , கனிமொழி  போன்றோரின் , அரசியல் பங்களிப்புக்கள் என்ன ?
கலைஞரின் உறவு என்ற , ஒரே தகுதிகள்தான் . இல்லையென , தி .மு . க .,வே மறுக்காது .
ஸ்டாலின் , அழகிரிக்களீன் வாரிசுகளான , உதய நிதி , தயாநிதிக்களீன் வாரிசுப் போர் .அடுத்தத் தலைமுறை தி .மு. க .,வுக்கு  தொடரும் ; பரவும் .

வாரிசு வளர்த்தல்  , உலக மயமாக்கப்பட்டு விட்ட வழிதான் .
இன்றைய , அமெரிக்க அதிபர் ., ஜியார்ஜ் புஷ் .,ன் தந்தை  , முன்னாள் அதிபரான புஷ்தான் .
அடுத்த தேர்தலுக்கு போராடும் , ஹில்லாரியோ , முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவிதான் .
பெனசீர் புட்டோவின் , 19 வயதான பிலாவல் புட்டோவோ  , அறிவிக்கப்பட்ட வாரிசு .

ஆக ,, வாரிசில்லா அரசியலுக்கு , பழகாத மக்களிருக்கும் வரை ,  வாரிசுகள் வந்தபடியே இருப்பர்தான் . இதுவே , ஆசிய அரசியலின் சாபக்கேடு ..!

     ச. பிரசன்னா 

Leave a comment »

பிரசன்னா – காதல் காலம்

      2.  காலம் .
‘ ஒரம்போ , ஒரம்போ …
ருக்குமணி ..வண்டி வருது ..” என
நேற்று நாமும்
 ” காதல் யானை
வருகுது ரெமோ …” – என
இன்று
நம் மகனும்
பாடிக் காதலிக்கின்றோம் …!                     
                                                                  
          3.   விபத்து .                                ,
” பயணிகள் கவனிக்கவும் ”                   
அறிவிப்பில்லாததால்                             
 அலட்சியமாகவே                                 
காதல்
தண்டவாளங்கள்
தாண்டப்படுகின்றன …!

3.   விபத்து .                                ,
” பயணிகள் கவனிக்கவும் ”                   
அறிவிப்பில்லாததால்                             
 அலட்சியமாகவே                                 
காதல்
தண்டவாளங்கள்
தாண்டப்படுகின்றன …!

காதலறிவிப்பு ..

கீழ்  விழுந்த
உன்
கைக் குட்டையை
எடுத்துத் தந்தேன் .
காதல்
குட்டைக்குள்

விழுந்தேன்

                                                        பிரசன்னா

Leave a comment »

பிரசன்னாவின் அரசியல் பார்வை

பா .ம.க. தலைவர் ராமதாசின் , தனியார்மயமாக்கலை எதிர்த்த , நிலமீட்பு போராட்டங்கள், சிரிக்கத்தான் வைக்கின்றன .  உத்தேசித்துள்ள தனியார் தொழிற்சாலைகள் , வன்னியரினம் பெரும்பான்மையாக இருக்கின்ற பகுதிகளீல் வருகின்றன .
அவர்கள் புலம் பெயர்ந்தால் , இருக்கும் ஆதரவையும் ,பா.ம.க .,  இழந்து விடும் எனபதே ,ராமதாசின் ‘ விவசாயி ‘ ஆதரவுப் போராட்டத்தின் அடிப்படைக் காரணம் .!

எப்போதும் , வளர்ச்சித் திட்டங்களின் போது , மக்களின் எல்லாச் சாராரையும் திருப்திபடுத்த முடியாது .
திருப்திபடுத்த முனைந்தால் , வளரவே முடியாது என்பதை உணராமல் ,எல்லாப் பிரச்னையையும் ,ராமதாஸ் அரசியலாக்குகிறார் .

எந்த பகுதியில் , வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் , எல்லாரும் இவரை அழைத்தாற் போல் ஒடோடிச் செல்கிறார் .
மக்களின் கருத்துக்களைக் கேட்கிறார் . நிலம் கொடுக்காதீர்கள் என்ற , தன் கருத்தைத் திணிக்கிறார் .

இவருக்கு கிடைப்பது , விளம்பரப் பெருமை .  ‘ நில மீட்புக் காவலர் ‘ என விரைவில் பட்டமும் சூட்டிக் கொண்டு விடுவார் ..!
விவசாயிகளுக்கோ , விற்க மனமிருந்தும் , நல்ல விலைக்கு விற்க முடியாத கொடுமைதான் ஏற்படுகிறது .

காய்கறிகளின் , விலையை ஏற்றினால்தான் , விவசாயிக்கு லாபம் .
காய்கறி , குறைந்த விலைக்கு விற்றால்தான் , பொது மக்களுக்கு லாபம் .
இது சமுகத்தின் நியதி .

ராமதாஸ் , விவசாயியை , நிலத்தை விற்காதே என ஊக்கப்படுத்துவார் .
அரசாங்கத்தை , காய்கறி விலையை கட்டுப்படுத்தாமல் , ஏழை மக்களின் வயிற்றீல் அடிக்காதீர்கள் என லாவணி பாடுவார் .

இரட்டை வேடங்களினால் , இரட்டை வித லாபம் அடைய பார்க்கிறார்கள் , இன்றைய அரசியல்வாதிகள் என்பதற்கு , இராமதாஸ் ஒரு நல்ல உதாரணம் .

ச . பிரசன்னா ,

Leave a comment »

பிரசன்னா பார்வை .ராமரும் , சேதுவும் …!

                                          வணக்கம் . தமிழக முதல்வரது , கொள்கைப் பிடிப்பான பேச்சு மெய்சிலிர்க்க வைக்கின்றது .
                                       ராமரும் , ராமாயணமும் . . .புராணக் கட்டுக்கதைகள் என்ற  வாதமுள்ள . . . மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றுவிட்டது .
கேவலம் , ஆட்சிக்காக . . .? கலைஞர் , அதை எப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது ..? அவரது , சுயமரியாதைக் கொள்கை  என்னாவது  . . ?
ஆரியரை எதிர்த்து , மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கியிருக்கலாமே . . ?  அல்லது , கேவலம் , மத்திய அமைச்சர்களையாவது , பதவி விலகச் சொல்லியிருக்கலாமே . . .?
கலைஞர் , அதை ஏன் செய்யவில்லை …என்பதுதான் ,  நாளைய புராணமாக இருக்கக் கூடும் . .!

கட்சி நடத்த ,யாரோ ஒருவர் வந்து பேரம் பேசினார் எனறும் , பா . ஜ . க .  கட்சி நடத்த …
 தி . மு . க ., பா . ம   . க ., எல்லாம் இளிச்சவாயர்களா . . .என்றும் கேட்கிறார் . 
கலைஞருக்கு … ‘ செலக்டிவ் அம்னிஷியா ‘ ..போலும் ..!

அதே பா . ஜ . க ., வுடன் கூட்டாயிருந்துதானே , இதே கலைஞரும் , பா . ம . க . ,வும் . . ஐந்தாண்டுக்கும் மேலாக மத்தியில் பங்கு பெற்றார்கள்் . மாறனின் மரணப்படுக்கையிலும் , அவரது மந்திரி பதவியை கலைஞர் தக்க வைத்துக் கொண்டார் .
அப்போது , இந்த திராவிடச் சூரியருக்கு , அவர்கள் ஆரியர்கள் எனத் தெரியவில்லையாமா . . ?

இளிச்சவாயர்கள் ,பதவியை கோட்டை விடுவதில் மட்டும் இளிச்சவாயர்களீல்லை போலிருக்கிறது . .!
கொள்கை வேறு ; ஆதரவு வேறு . . .என்பதுதான் பகுத்தறிவு போலும்  . .! போகட்டும் .,

இதே பா . ஜ . கவும்  , அ .தி . மு . க .,தான் ., சேது சமுத்திரத் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள் என்கிறார் . .? சரி . அவர்கள் , இத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றார்களே தவிர , ராமர் பாலத்தை இடித்துத்தான் நிறைவேற்றுவோம் எனச் சொல்லவில்லையே . .!
இப்போதும் , ராமர் பாலத்தை இடிக்காமல் , மாற்றுப் பாதையமைத்து நிறைவேற்றுங்கள் என்றுதானே கேட்கிறார்கள் ..?
தவிரவும் ,பார்லிமெண்ட்டில் ‘45 ‘ மணி நேரத்திற்கும் மேலாய் சேதுவிற்காய் பேசினவர்களையும் காணவில்லை என ‘வை . கோ ., ‘வைச் சாடுகிறார் .
45 வருடத்திற்கும் மேலாக , சுயமரியாதைக்காக ,சுடரெனப் பணியாற்றும் கலைஞர் ,
ஆட்சிக்காக …ஆரியருக்கு அடிபணியும் காங்கிரஸுக்கு  ஆதரவை விலக்காமல் இருப்பது எந்தச் சுயமரியாதையோடு என்றாவது சொல்லட்டும் . .!
அதே போல் ,
ராமர் மட்டுமன்றி , ‘ இயேசு கிறிஸ்து ‘ , ‘அல்லா ‘ .,க்களும்  கூட  , மூட நம்பிக்கைதான் எனச் சொல்லி சுயமரியாதைக் கொள்கையை நிலை நாட்டட்டும் ..!

ராமரை  நம்பாத கலைஞர் , ‘ ராமதாஸ் ‘ …என்ற பெயருள்ளவரை நம்பி  , ஆட்சி நடத்துவதுதான் ,..
திராவிட ராமாயணம் போலும் . . .!
      பிரசன்னா 

Leave a comment »

பிரசன்னாவின் தமிழ்க் கவிதை .

கற்றது தமிழாயினும் . . .
பேசுவது தமிழாயினும் . . .
புரிவது  தமிழாயினும் . . .
ஏனடா தமிழா . . .?
பயன்பாடுகளீல்
மட்டும்
இத்தனைத்
கல்லாத
பிற மொழிக்
கலப்பு . . .?
விடை காணவே . . .
விரும்புகிறேன்  . .

                                                பிரசன்னா

Leave a comment »

பிரசன்னாவின் கவிதைத் துளிகள் .

இது
என்னால்
எனக்காக
இயற்றப்பட்டதாயினும் …
கவிதை
காலம் 
தேஸம் தாண்டி
நிற்கும் …

பரவும் ….

பரிமாறப்படும் …
எனத்தான்
பகிர்கிறேன் ….!
                        பிரசன்னா .

Leave a comment »

பிரசன்னாவின் இன்றைய கவிதை

என்
மனம்
சொன்னது .
எதையும்
ஒரு முறை
கேள்
என்று . .?
நான்
கேட்கவில்லை …
என்
காதலைக்
கேட்காமல்
இருக்கும்
போது . . .
ஏன்
என்றால் …
கேட்ட போது
தருவதற்கு . . .
எதுவும்
இல்லை.

Leave a comment »

தெரியுமா . . .?

தெரியுமா . . .?

அனுதினமும்
ஆகமம்
ஆயிரம்
படித்தாலும் . . .
வேதமாயிரம்
பாராயாணமாயிரம்
ஒதினாலும் …
சொல்லில்
அடங்காதவை . . .?
சொல்லுக்குள்
அடக்க
முடியாதவை . . .
இளமைக்கால
காதலர்களின்
உளறல்களதான். . .!
எங்கே எந்தன் ஜீவனே . . .?

 நீ
போகும்
பாதையிலுள்ள
புல்வெளீயும்
கேட்கிறது .
ஏனிந்த
மவுனம் என்று . . .?

உனக்கு
என்னைப்
பிடித்ததால்
பேசுகிறாயா . . .
இல்லை ..?
என்
பேச்சுப்
பிடித்ததால்
பேசுகிறாயா. . .
என்பதுதான்
இன்னமும்
பிடிபடவே
இல்லையெனக்கு . . .!

பரவாயில்லையடி . . .!
 நீ
என்னுடன்
வருவதாயில்லை
என்றாவது
சொல்லிப்
போ  . . .!

சொல்லித் தெரிவதில்லைதான்
மன்மதக் கலை . . .!
யாரோ 
ஒருவர்
சொன்னாலும் . . .
சொல்லத்
தெரிவதில்லைதான் . . .
முடிவதில்லைதான் . . .
காதலின்
நிலை . . .!

இது
நமக்குள்ளான
ஒப்பந்தமாகவிருக்கட்டும் .
சொன்னாலும் . . .
சொல்லாவிட்டாலும் . . .
இறுதி வரை
பார்வையில்
ஆயிரம்
வெண் சாமரம்
வீசிக்
கொண்டிருப்போம் .                       பிரசன்னா .
என்பதை . . .!
 

Leave a comment »

பிரசன்னாவின் புதுக்கவிதைகள் .

உருவமற்ற
சிலையும்
உளி
கொண்டுதான்
படைக்கப்படும் …1

காலமெல்லாம்
வாழும்
இதிகாஸமும்
ஒரு
கவித்துளியாகத்தான்
உருவாகும் . .1

நேரம்
காலம்
சரிவரவும்
கவிதைகள்
கவிக்குயில்கள்
இன்னிஸை பாடும்
பாடலை
தொடர்கிறேன்

                      பிரசன்னா .

Leave a comment »

பிரசன்னாவின் இன்றைய கவித் துளிகள் .

வணக்கம் .

இது என்னை அறிமுகப்படுத்துவது மட்டுமன்று …?
என் கவிதைகளையும்
அறிமுகப்படுத்தத்தான் …!

காலம் தாண்டி . . .
தேசம் தாண்டி . . .
வாழுமென்ற
கவிதைகளை . . .
படைக்கவும் ஆசை . . .!
படைப்புத்
தாகத்தை
தணிக்கவும் ஆசை . . .!

என் பக்கங்கள் , இதற்கு உதவியாகலாம் .
என் படைப்புக்கள் , அதற்கு உறுதுணையாகவும் இருக்கலாம் .
உங்கள் கருத்துக்கள் , கிரியா ஊக்கியாகவும் மாறலாம் .
உதவுங்கள் …!

                    பிரசன்னா .

Leave a comment »

பிரசன்னாவின் புதினக் கவிகள் .

உன்னால்
மனதாலல்ல …
பணத்தால்தான்
காதல்
நிர்ணயிக்க்ப்படுமென
அற்ந்தேன் …!

உன்னால்தான்
காதல்
கணை
கண்ணையும்
மட்டுமன்றி …
பெண்ணையும்
மறைக்குமென
அறிந்தேன் ….!

                    பிரசன்னா

நீ
கேட்காத
ஒரே
வரம்
என்னூடனில்லாத
நின்
சுயம்வரம்தான்….!

Comments (1) »

பிரசன்னாவின் கவிதா விலாஸங்கள்

கவிதைக்கு 
விலாசமில்லை . . .
கருத்துக்கு
காலமெல்லாமிருக்கும் .
சொல்லியவர்
கொண்டுதான்
சொல்லியவை
மதிக்கப்படும் . . .
ம்றவாதிருக்கப்படும்  . . .
மனிதனால்
அல்ல …
உலகத்தால் . . . !

Leave a comment »

பிரசன்னா புதிய பக்கங்கள்

பயணங்கள் தொடரும் . . .
பாதைகள் விரியும் . . .
பரவிப் பரவி
புவியில்
புரவியென
படரும்
காலம் .
காதல் ,
காலம்
தாண்டி
நிற்கலாம் . .
நிறம்
மாறலாம் . . .

Leave a comment »

பிரசன்னா பக்க்ங்கள்

கவிதைகளை , கருத்துக்களை சொல்வதும்
கேட்பதும் …கவிதைகளை , கருத்துக்களை சொல்வதும்
கேட்பதும் …
மட்டும்
மனதில் திருப்தி தராது .!
காலத்தால்
அழியாத
கவிதா இதிகாஸம்
படைப்பதும் . . .
படைக்க
முயல்வதும்தான்  . . .1
இயன்றவரை
முயன்று கொண்டிருக்கிறேன்
இனி
இப் பக்கத்தின்
வழியாகவும்
முயல்வேன் ..

Leave a comment »